எட்டு நாட்களில் வேண்டுதல் பலித்தது சாய் பாபாவின் மகிமை!


சென்னை வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் வேலு என்பவருக்கு திருமணம் 2005-ல் நடைபெற்றது. கடன் வாங்கித்தான் திருமணம் செய்தார். 2006-ல் அவரது தந்தை பக்கவாதத்திலும், நெஞ்சு வலியாலும் அவதிப்பட்டார். வீட்டில் இருந்த நகைகளெல்லாம் அடகு வைத்து அவரது மருத்துவச் செலவினை கவனித்தார். சில மாதங்களுக்குப் பிறகு வேறு வழியின்றி வெளியே கடன் வாங்க ஆரம்பித்தேன். கடன் எட்டு லட்சமாக் உயர்ந்தது. கடனுக்கு வட்டி கட்டி போக சாப்பாட்டிற்க்கும் வழியில்லாமல் போனது. இந்த நிலையில் அவரது மைத்துனர் ஒருமுறை அவரிடம் ‘நீங்கள் மைலாப்பூரிலுள்ள பாபா கோயிலுக்கு ஒருமுறை போய் வாருங்கள்’ என்றார். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருந்த அவருக்கு , அங்கு சென்று பாபாவை பார்த்தவுடன் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதார். அங்கு உள்ள “நான் இங்கிருக்கும் போது ஏன் பயப்படுகிறாய்? நம்பிக்கை, பொறுமை’ என்ற வாசகங்கள் அவருக்குள் ஒரு மாற்றத்தினை உருவாக்கின.

அதன் பின்னர் அடிக்கடி அங்கு செல்ல ஆரம்பித்தார். அங்கு சாயிதரிசனம் புத்தகம் வாங்கினார். அதில் இருந்த விசயங்கள் அவருள் பெரிய அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தின. சில மாதங்கள் கழித்து பெரிய அளவில் இருந்த கடன்களை ஒரு கட்டுக்குள் வந்தன. எல்லா கிரிடிட் கார்டுகளையும் சரண் செய்தார். வாரம் தவறாமல் பாபா கோயிலுக்குப் போனார். மாதம் தவறாமல் சாயி தரிசனம் புத்தகம் வாங்கினார். அவரது பல கேள்விகளுக்கு அதில் பதில் கிடைத்தது.ஆன்மீகம் தொடர்பான பல சந்தேகங்களுக்கும் அதில் தெளிவு கிடைத்தது. எப்படி பக்தி செலுத்துவது என்று கூட கற்றுத் தந்தது. சாயி தரிசனம் ஊட்டிய பக்தியால் மேலும் மேலும் பாபாவினை நெருங்க ஆரம்பித்தார். அதனால் மிகுதியான பலன்களை பெற்றார்.

அவரது வீட்டில் பாபா படம் உள்ளது, பாபா நீங்கள் எனது வீட்டிற்க்கு சிலையாகவாவது வரவேண்டும், நானாக பணம் கொடுத்து வாங்கமாட்டேன் என்று மனதில் வேண்டுதல் வைத்தார். அதன் பிறகு பலமுறை பாபா கோயில் செல்லும் போதெல்லாம், அவரது மனைவி பாபா சிலையினை பார்த்து அவர் அழகில் வியக்கும் போதெல்லாம் அவர் அந்த இடத்தினை விட்டு நகர்ந்து விடுவார். வேண்டுதல் பற்றி தனது மனைவிக்கு தெரியாது. இப்படியே பதினெட்டு மாதங்கள் நகர்ந்தன. ஒரு முறை தத்தாத்ரேயர் பற்றிய படம் ஒன்றினை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவரது பாட்டி ஊரிலிருந்து வந்தார். அவர் காசி, கயா தீர்த்த யாத்திரைக்கு சென்றி திரும்பியதாக தெரிவித்து பிரசாதங்களை அளித்தார். அந்த பிரசாதங்களுடன் ஒரு சிறிய பாபா சிலை ஒன்றும் இருந்தது அச்சிலை அவரை மெய் சிலிர்க்க வைத்தது. அதனை பெற்றுக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த அவர் தனது பல நாள் வேண்டுதலைச் சொன்னார்.

அப்போதுதான் அவரது மனைவிக்கே தனது வேண்டுதலும், சிலையை காசு கொடுத்து வாங்க மறுத்த காரணமும் தெரிந்தது. சில மாதங்களுக்குப் பிறகு வருமானம் குறைய ஆரம்பித்தது. செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறினாலும், பாபா கோயிலுக்குச் செல்வதை மட்டும் நிறுத்தவில்லை., சாயி தரிசனம் பத்திரிகையொன்றில் ஒரு பக்தர் எட்டு நாட்களில் ஒரு வேண்டுதல் நிறைவேற வேண்டுதல் ஒன்றினை பாபாவிடம் வைத்ததாகவும் அது அவருக்கு பலித்தது என்றும் படித்தார். சாயியிடம் வேண்டுதல் வைத்த பிறகு அது சாயியின் பிரச்சனை விட்டு விலக வேண்டும், பாபாவே அதனை சரி செய்வார் என்றும் இருந்தது. சீரடியிலிருந்து உதி தனக்கு எட்டு நாட்களில் வரவேண்டும், தானாக யாரிடமும் உதி கேட்கமாட்டேன் என்றும் வேண்டுதலினை பாபாவிடம் வைத்தார்.
பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் சென்றார். 

சாயி தரிசனம் சொல்வதைப்போல பூ பழம் எடுத்துச் செல்லாமல் தனது பிரச்சனைகளை மட்டும் எடுத்துச் சென்றார். பாபாவின் கண்களில் இருந்த காந்த சக்தியின் முன் தனது பிரச்சனைகளை சொல்ல திணறினார். வெட்கப்பட்டு பிரச்சனையினை எழுதியும் பாபா முன் வைக்கவில்லை. மறு நாளும் அங்கு சென்றார். அந்த காந்த சக்தியினை தன்னால் இப்போது உணர முடியவில்லை. திகைப்புடன் நின்றார். அப்போது அங்கிருந்த ஓர் அம்மா, சாயி வரதராஜன் மேலே பிரார்த்தனையில் இருக்கிறார், செல்லுங்கள் என்று அவரை மாடிக்கு அனுப்பினார். அப்போதுதான் எனக்கு தனது வேண்டுதலின் எட்டாவது நாள் இன்று என்ற நினைவு வந்தது. பாபா எப்படி உதி தரப்போகிறார் பார்ப்போம் என்று நினைத்தபடி. மேலே சென்றேன். அங்கு சாயி வரதராஜன் யாரோ ஒரு குடும்பத்தினருக்கு பிரசாதங்களைத் தந்து கொண்டிருந்தார். 

நான் மாடியில் அனுமனையும் சாயியினையும் வணங்கினார். அப்போது சாயி வரதராஜன் அவர்கள் அவரை ஜாடை காட்டி அழைத்து அங்கு அமரச்சொன்னார். உதியினைத் தந்து ‘இது சீரடி உதி, வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார். பிரார்த்தனை செய்த எட்டாவது நாளில் பாபா அருள் எனக்குக் கிடைத்தது. ‘இனி எல்லாம் உங்களைத் தேடி வரும், கவலைப்பட வேண்டாம்’ என்று சாயி வரதராஜன் அவர்கள் சொன்னார்.  வேலைக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்ததால் கிளம்ப எழுந்தார். அப்போது அவர் அமருங்கள், பிரார்த்தனை முடிந்த பிறகு சென்றால் போதும் என்று சொல்லி உட்கார வைத்துவிட்டார். பிறகு அவரை கூப்பிட்டு என்ன பிரச்சனை என்று கேட்டு அதற்காக பிரார்த்தனை செய்து உதி அளித்தார்.

அடுத்த வாரத்தில் அவருக்கு போன் மூலம் வேறு வேலை கிடைத்தது. நல்ல சம்பளம். அதன் பிறகு வாரம் இரு முறையாவது பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் வந்து விடுவார். தனது முதல் மாத சம்பளத்தில் ரூ 2400 கொடுத்தேன். சீரடி செல்ல வேண்டும் என்றால் இவருடன் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து பணம் கட்டி காத்திருந்து, அவருடன் சீரடி சென்றேன். பாபா வாழ்ந்த இடங்கள் அனைத்தையும் தரிசித்தார். சமாதி மந்திரில் அவர் மேல் விழுந்த மலரினையும், குருஸ்தான் போனபோது கிடைத்த வேப்பிலையினையும் துவாரகமாயி சென்ற போது கிடைத்த தேங்காயினையும் தனது பூஜையறையில் வைத்திருக்கிறேன். ஜெய் சாயிராம்!

Comments

Popular posts from this blog